யாழில் வீடு புகுந்து தாக்குதல்: இளைஞர் ஒருவர் படுகாயம்
யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி - வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடு புகுந்து தாக்குதல்
பாதிக்கப்பட்ட இளைஞர் நரசிம்மர் ஆலயத்திற்க்கு செல்லும் போது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அவரை நாளாந்தம் கேலி செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் குறித்த நபர்களே வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை இழந்த நிலையில் குறித்த இளைஞரும், அவரது சகோதரரும் தனிமையில் வாழ்ந்து வருவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri
