கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை - வெளிநாட்டவர் கைது
கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது அங்கு ஒருவரை தாக்கியதற்காக இந்திய பிரஜை ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவருக்கும் இந்தியருக்கும் இடையே ஏற்பட்ட பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியர் கைது
இதனால் இந்திய பிரஜை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் வத்தளையை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக கோட்டை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
