யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முச்சக்கரவண்டியொன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே மாணவர்களை வழி மறித்துத் தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இருவர் வைத்தியசாலையில்
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
