நள்ளிரவில் நடந்த தாக்குதல் - தமிழர் பகுதி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் வைத்தியசாலையில்..
மட்டக்களளப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(20.08.2026) இடம்பெற்றுள்ளது.
திருவிழாவில் ஏற்பட்டுள்ள குழப்பம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியசாலையில் இருவர் அனுமதி
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் இதுவரையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
you may like this..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5