பாகிஸ்தானில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்! வீதியில் இழுத்து செல்லப்பட்ட பெண்கள்
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அடித்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஃபைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் நான்கு பெண்களை நிர்வாணமாக்கப்பட்டு தடியினால் அடித்து, ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, பஞ்சாப் மாகாண பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்கள் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குப்பைகள் சேகரிக்க சென்ற போது, அங்கிருந்த கடையொன்றுக்குள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது, தம்மை திருடர்கள் என எண்ணி தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தமது ஆடைகளை பலவந்தாக நீக்கி நிர்வாணமாக்கி, அடித்து வீதிகளில் ஊர்வலமாக சென்றதாகவும், ஒருவர் கூட தமக்கு உதவவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam