ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (PHOTOS)
சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமான தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் முல்லைத்தீவு நகரத்தில் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை ஊடகவியலாளர் புகைப்படம் எடுத்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்புடைய செய்திகள்...
மாவீரர் நாளில் முல்லைத்தீவில் எமது ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்
முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: கிளிநொச்சி அமையம் கண்டனம்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை



குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri