வெளிநாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த கொடூரம்! சமூக ஊடகங்களில் வைரலாகும் படங்கள்
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்து அதனை காணொளியாக பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியர், ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவர் என சியால்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கொடூர கொலைகளின் காட்சிகளின் சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, இலங்கையரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்து அதனை காணொளியாக பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்கள்.......
பாகிஸ்தானில் அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் : உடன் பணி புரிந்தோரின் கொடூரச் செயல்
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்
பாகிஸ்தானில் இலங்கையருக்கு நேர்ந்த கொடூரம்! அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் அதிரடி அறிவிப்பு
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri