கராத்தே போட்டியில் பதக்கங்களை அள்ளிய வவுனியா வீர, வீராங்கனைகள் (PHOTOS)
வடக்கு கிழக்கு மாகாண ரீதியாக நடாத்தப்பட்ட கராத்தே போட்டியில் வவுனியா வீர வீராங்கனைகள் இன்றையதினம் வெற்றி பெற்று பதக்கங்களை தமதாக்கி கொண்டுள்ளனர்.
இலங்கை கராத்தே சம்மேளத்தினால் வடக்கு கிழக்கு இரு மாகாணங்களும் இணைந்து நடாத்திய கராத்தே சுற்றுப்போட்டி இன்றையதினம் (02) திருகோணமலை makaizer indoor stadium இல் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் வவுனியாவை சேர்ந்த 11 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியில் வவுனியா dinesh martial arts school வீர வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்து வவுனியா மண்ணிற்கு பெருமையை சேர்த்துள்ளனர்.
இவ் கழகத்தின் தலைமை ஆசிரியராக sensei t.b dinesh (5th dan) அவர்களின் மேற்பிரிவு மாணவர்களும் துணைக் கழகத்தின் பயிற்சி ஆசிரியரான sensei g.gnanakeethan (3rd dan) அவர்களின் மாணவர்களும் பதங்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.


ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri