முல்லைத்தீவில் வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வன்மை திறனாய்வுப் போட்டி
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மலை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வன்மை திறனாய்வுப் போட்டி இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, குமுழமுனையினை பிறப்பிடமாக் கொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதனின் முற்றுமுழுதான அனுசரனையில் மகேஸ்வரன் குமுதன் ஒழுங்குபடுத்தல்களுடன் இன்றைய தினம் (01.03.2014) நடைபெற்றுள்ளது.
ஆண்களுக்கான வீதியோட்டமானது, சிலாவத்தை சந்தியிலிருந்து ஆரம்பமாகியதுடன் பெண்களுக்கான நிகழ்வு உடுப்புக்குளம் சந்தியில் ஆரம்பமாகியுள்ளது.

சிங்க இராணுவ படையணியினர் உதவி
இதன்போது, ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை வசந்தராசா தர்சன், இரண்டாமிடத்தினை ரஜனிகாந் சரன், மூன்றாமிடத்தினை அரசரட்னம் டினோசன் பெற்றுக்கொள்ள பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை சிவகுமார் டிலைக்சிகா, இரண்டாமிடத்தினை வசந்தன் தரன்யா, மூன்றாமிடத்தினை அன்ரனியாஸ் அஸ்வினி ஆகியோர் தங்கள் வசப்படுத்தி வெற்றி பெற்றுகொண்டுள்ளார்கள்.
மேலும், இவ் வீதியோட்டத்தினை வலுச்சேர்க்கும் முகமாக அளம்பில் 24ஆவது சிங்க இராணுவ படையணியினர் உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.













அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri