ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள யோசனை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளமையை இலங்கை தொடர்பான மைய நாடுகளின் குழு உறுதி செய்துள்ளது.
ஏதிர்வரும் அமர்வின்போது இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஜெனீவா பேரவைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஜூலியன் பிரைத்வெய்ட்டி இதனை நேற்று பேரவையில் அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46வது அமர்வு எதிர்வரும் 22 முதல் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் யோசனையை முன்வைக்கவுள்ளதாக கனடா, ஜேர்மனி, மொண்டிக்ரோ, வடமெனடோனியா, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழு அறிவித்துள்ளது.
இது யோசனை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தி முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் நேற்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து ஜெனீவா அமர்வு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
எனினும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.



