கதறும் புகலிடக்கோரிக்கையாளர்கள்! பிரித்தானிய எம்.பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
பிரித்தானியாவில் மிதக்கும் குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கதறாமல் பிரான்சிற்கே சென்று விடுங்கள் என கன்சர்வேடிவ் கட்சி துணைத் தலைவரான லீ ஆண்டர்சன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக்கேட்க போவதில்லை எனவும், அது தமது ஆதங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சி துணைத்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்
Dorset பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்பில், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கம் இவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய முடிவை அறிவிக்கும் வரையில், 3 முதல் 9 மாதங்கள் வரையில் தங்க வைக்கவுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது.ஒவ்வொரு முறையும் படகுகள் மூலமாக மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதும், அவர்களை ஹொட்டல்கள் மற்றும் மிதக்கும் குடியிருப்புகளில் தங்க வைப்பதும் உண்மையில் கோபத்தை ஏற்படுத்துகின்றது.
பிரான்சில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பது கண்கூடாக பார்த்தவன். இதனால் தான், பிரித்தானியா அளிக்கும் வசதிகளை ஏற்க மறுப்பவர்கள், பிரான்சிற்கே சென்றுவிட வேண்டும் என்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |