பிரித்தானியாவை விட்டு வெளியேறினால்... அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்
தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு £10,000 வீதம் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் நான்கு பேருக்கு இந்தத் தொகை வழங்கப்படும் இந்தச் சலுகையை ஏழு நாட்களுக்குள் ஏற்றுக்கொண்டு வெளியேறத் தவறினால், அவர்கள் கட்டாயமாக நாடுகடத்தப்படுவார்கள் என்று அரசு எச்சரித்துள்ளது.
தற்போது சுமார் 150 குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், வரி செலுத்துவோரின் பணத்தில் சுமார் £20 மில்லியன் வரை சேமிக்க முடியும் என உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
புதிய நிதியுதவித் திட்டம்
தற்போது தஞ்சம் கோருபவர்களின் தங்குமிட வசதிகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு £158,000 வரை செலவாவதாகக் குறிப்பிட்டுள்ள ஷபானா மஹ்மூத், இந்த புதிய நிதியுதவித் திட்டம் அரசுக்கு பெரும் இலாபகரமாக இருக்கும் என்று வாதிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் பெறப்பட்ட 82,100 தஞ்சக் கோரிக்கைகளில் 58% நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அரசு வழங்கும் தங்குமிட வசதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்துள்ளது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகள் கூட்டமைப்பு (RMCC), இவ்வளவு பெரிய முடிவை எடுக்க குடும்பங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே அவகாசம் வழங்குவது மனிதாபிமானமற்றது என்றும், இது குழந்தைகளை வீதியோரம் தள்ளும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளது.
பசுமைக் கட்சி (Green Party) இந்த நடவடிக்கையைத் தீவிர வலதுசாரி கொள்கைகளின் எதிரொலி என விமர்சித்துள்ளது.
அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியினர் இந்த நடவடிக்கை போதாது என்றும், குற்றவாளிகளை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் சுமார் 100 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதி அந்தஸ்தைத் தற்காலிகமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் 2029ஆம் ஆண்டுக்குள் ஹோட்டல் பயன்பாட்டை முழுமையாக ஒழித்து, அகதிகளை முன்னாள் இராணுவ முகாம்கள் போன்ற குறைந்த செலவிலான இடங்களுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam