இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிகள் குறித்து வெளியான முக்கிய தகவல்
இரண்டு இலட்சம் பயனாளிகள் இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காததால், அவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வங்கி கணக்கு
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காத பயனாளிகள், வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல்கள் கிடையாது.
பிரதேச சபைகளால் அஸ்வெசும கணனி கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைகளில் அஸ்வெசும பயனாளிகள் தமக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும்.
நலன்புரி நன்மைகள் சபை
இதன் பின்னர் வங்கிகளால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டை இல்லாததால், வங்கி கணக்குகளை ஆரம்பிக்காதிருப்பவர்கள் ஆறு மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் ஆறு மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியுமென்ற நிபந்தனையுடன் கணக்குகளை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.''என கூறியுள்ளார்.