நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயனாளிகளின் பட்டியல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 5 ஆயிரத்து 45 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் கீழ், சிறுநீரக நோயாளர்கள், முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையோர் அடங்கிய பயனாளிகளின் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிடப்படும்.
மேலும் அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |