இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக, 3,493,915,000.00 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது.
இரண்டு கட்டங்களின் நிதி ஒதுக்கீடு
இதற்கமைய, இரண்டு கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாய்.
இரண்டாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபாய்.
அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த சபை மேலும் அறிவித்துள்ளது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan