மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் - இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை வருமானம்
கொழும்பு துறைமுகத்தின் செயல்பாட்டு வருமானம்,கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாத வருமானம் அதிகரித்துள்ளது.
வருமானம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணி
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
தற்போதைய சூழலில் கொழும்பு துறைமுகத்தை ஒரு செயல்பாட்டு மையமாக செற்படுத்தியதன் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.