அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்: வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.
இதனை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்குகளில் வரவு
அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 1,408,635 குடும்பங்களுக்காக, 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிக தொகை இன்று அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

அதேபோல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகளுக்காக 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை இன்றைய தினம் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளில் நிதி வைப்பிலிடப்பட்டதைத் தொடர்ந்து, பயனாளிகள் இன்று முதல் தங்களது அருகிலுள்ள வங்கிக் கிளைகள் அல்லது தன்னியக்க இயந்திரங்கள் (ATM) மூலம் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.