அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 34 இலட்சம் குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், 17 இலட்சம் குடும்பங்களின் தரவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கள உத்தியோகத்தர்களை நியமித்து கைத்தொலைபேசி விண்ணப்பத்தின் ஊடாக இந்த மீள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுக்களின் மூலம் உரிய தகவல்கள் சரிபார்க்கப்படவுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டம்
உலக வங்கியின் கடன் உதவியில் செயற்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலம் இந்த கொடுப்பனவு தொகை செலுத்தப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்புகளை மேற்கொள்வதனால், ஊக்குவிப்புக் கொடுப்பனவாக நூற்றைம்பது ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கிராம அலுவலர்கள் கள அளவில் தரவு சேகரிப்பு பணியை கண்காணித்து, கண்காணிப்பு அலுவலர்களுக்கு விண்ணப்பம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |