அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:இன்று முதல் கிடைக்கவுள்ள கொடுப்பனவு
இலங்கையில் உள்ள 1,406,902 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான 8775 மில்லியன் ரூபா அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று முதல் (05.12.2023) இந்த பணம் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு தொகை ஆண்டு இறுதிக்குள் பயனாளிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படுவோருக்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
