இன்று முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம்: வெளியானது அறிவிப்பு
அஸ்வெசும உதவித்திட்டத்தை பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை இன்று முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் பணம்
அதன்படி பயனாளிகள் இன்று முதல் தமது வங்கிக் கணக்குகள் மூலம் தமக்கான பணத்தை பெற முடியும் என சபையின தலைவர் ஜெயந்த வீஜெரத்ன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 592,766 தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 2,963 மில்லியனுக்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர் நிதி உதவி
குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை ஆதரிப்பதை நோக்கமாக கொண்ட அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
