2046ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியை தாக்கும் சிறுகோள்: நாசா எச்சரிக்கை!
2046ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று (பெப்ரவரி 14) பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசா எச்சரித்துள்ளது.
இந்த தகவல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2046ஆம் ஆண்டு பெப்ரவரி 14 திகதியன்று மாலை 4.44 மணிக்கு இந்த தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு
உள்ளது எனினும் அந்த சிறுகோள் பூமியில் எங்கு விழும் என்பது இன்னும்
தெரியவில்லை.
அணு வெடிப்பைப் போன்ற தாக்கம்
கணிக்கப்பட்ட தாக்க மண்டலங்கள், இந்தியப் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் மேற்கிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளது.
165அடி கொண்ட 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், பூமியுடன் மோதுவது 114 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் மோதிய துங்குஸ்கா 12 மெகாடன் நிகழ்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்த 160அடி சிறுகோள் ஒரு அணு வெடிப்பைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இது ஒரு பெரிய பெரு நகரத்தை அழித்திருக்கும். எனினும் அது ஒரு காட்டில் வீழ்ந்துள்ளது.
இதன்போது, 80 மில்லியனுக்கும் அதிகமான மரங்களைத் தரைமட்டமாக்கியுள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் சராசரியாக 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாக நாசா
கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
