ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos)

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Thileepan Nov 16, 2023 01:15 AM GMT
Report

1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு ரணிலின் இலஞ்சம்.நிதி ஒதுக்கீடு மூலம் இராணுவமும், ராஜபக்சகளும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் என்பதை ரணில் ஏற்றுக்கொள்கிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் 2460 நாளாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் போது நேற்று(15.11.2023) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதி உதவியை நாடவில்லை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, இராணுவமும், ராஜபக்சகளும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் என்பதை ரணில் ஒப்புக்கொண்டார்.1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு ரணிலின் இலஞ்சம்.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

சமீபத்திய வரவு செலவுத் திட்ட அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் 1500 மில்லியன் ரூபாவை ரணில் ஒதுக்கினார். அது தோராயமாக நான்கரை இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். எவ்வாறாயினும், இந்த தொகையைக் கொண்டும் கொழும்பு-7 கறுவாத்தோட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கூட வாங்க முடியாது. இது ஒரு மூடிமறைப்பு.

தாய்மார்களாகிய நாங்கள் அரசாங்கத்திடம் நிதி உதவியை நாடவில்லை. எங்கள் குழந்தைகளின் இருப்பிடம் குறித்து கண்டறிவதே எங்கள் முதன்மையான கவலை. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இருந்து 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளை இலங்கை இராணுவமும், தமிழ் துணை இராணுவக் குழுக்களும் கடத்தி சென்றுள்ளனர். 

ராபர்ட் பிளேக் கேபிளின் பதிவு 

இந்த இளைஞர்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டும், அடிமைத் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். பிளேக் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளின் பதிவு எம்மிடம் உள்ளது.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

இலங்கையில் எஞ்சிய சில தமிழ் குழந்தைகள் பிக்குகளாக (பௌத்த பிக்குகள்) நிர்பந்திக்கப்பட்டனர். மற்றவர்கள் சிங்கள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டனர்.

ரணிலின் எம்மை ஏமாற்றும் முயற்சி வெற்றியடையாது. காணாமல் ஆக்கப்பட எமது பிள்ளைகளை கண்டறிவதற்காக கைது செய்யும் அதிகாரத்துடன் கூடிய நம்பகமான சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்துகிறோம். சிங்கள அரசியல்வாதிகள் மீதும் அவர்களின் நீதித்துறை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீதிபதி சரவணராஜாவைத் தேடி, அவருடன் கேளுங்கள்.

இராணுவம், பொலிஸ், சிங்கள அரசியல்வாதிகள், சிங்களக் குண்டர்கள் மற்றும் அரசாங்கத்தினால் மிரட்டப்பட்ட நீதிபதி சரவணராஜா தனது பாதுகாப்புக்கு பயந்து தீவை விட்டு வெளியேறினார். தற்போது, அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.

கருணாவை பிரிக்கும் சதி

ரணில் நம்பத்தகுந்தவர் இல்லை. ஒரு பைசாக்கு கூட விலை மதிப்பு இல்லாதவர். அவர் சதி கோட்பாடுகளை நம்புபவர் மற்றும் எவராலும் நம்பத்தகாதவர். அவர் தனக்குள் இருக்கும் குணத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக இதை முன்வைக்கிறார்.

ஆனால் அவரது உண்மையான எண்ணம் காணாமல் போன எங்களின் தமிழ் குழந்தைகளைக் கண்டறியும் எங்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் இருந்து நம்மை நிறுத்தும் முயற்சியே.

தமிழ் புலிகளிடம் இருந்து கருணாவை பிரிக்கும் சதித்திட்டத்திற்குக் காரணமான ரணில் என்ற நபரை நாம் நன்கு அறிவோம். சுமந்திரனின் துணையுடன் தமிழர் தாயகத்தில் 1000 விகாரைகள் அமைப்பதற்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியவரும் ரணில் தான்.

ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பயன்படுத்தி ரணில் 4000 சிங்கள குடும்பங்களை வவுனியா நெடுங்கேணியில் வெற்றிகரமாகக் குடியமர்த்தினார்.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

மேலும், இலங்கையில் பௌத்தத்தை முதன்மையான மதமாக ஏற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் மூலம் அவர் நாடாளுமன்றத்தில் இதனை பிரகடனப்படுத்தி உலகளாவிய விழிப்புணர்வை உறுதி செய்தார்.

ரணில் மிகவும் திறமையான திட்டமிடுபவர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவருடைய திட்டங்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். நம்மை பாதுகாத்து கொள்ள, அவர் சொல்வதையெல்லாம் நிராகரிக்க வேண்டும்.

இந்த மூலோபாயத்தை பயன்படுத்துவதன் மூலம், வரவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். தமிழருக்கு ஒரே தீர்வு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அணுகி உதவி பெறுவதுதான் என தெரிவித்துள்ளார். 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US