அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்பு
பதவிக்காக மற்றும் ஒருவர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்தும் பதவியில் நீடிக்குமாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேனவை (Dr. Prasanna Gunasena) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksha) கேட்டுள்ளார்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் குறித்த பதவிக்காக புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தாம் பதவி விலகவுள்ளதாக பிரசன்ன குணசேன முன்னதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையில்,இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை ஒரு மாதத்துக்கு அந்த பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் பிரசன்ன குணசேனவின் கருத்தை அறியமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்...
இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
