இலங்கையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்பு கழகம் உள்ளிட்ட 15 அமைப்புக்களின் நிதிகள் மற்றும் சொத்துக்களை முடக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண(Kamal Gunaratne) இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நிதி பொருளாதார வளங்கள்
15 அமைப்புக்கள அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்கள் ஆகியவை இவ்வாறு செயல் இழக்கச்செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |