நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள் : அரசிடம் கிரியெல்ல வலியுறுத்து
"நாடாளுமன்றத்தை அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும்" என அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella ) கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை மூடாமல் கூட்டத் தொடரை நடத்துவதே அவசியம் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் சபாநாயகர் மௌனம் காக்கக்கூடாது என்றும் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri