ஊடகவியலாளர் ஐ.நடேசனின் நினைவு தினத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மீள் உருவாக்கம்...! (Photos)
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் படுகொலையின் பின்னர் மௌனித்துப் போன கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமானது நடேசனின் 19ஆவது ஆண்டு நினைவு தினத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த ஊடகவியலாளர் ஐ. நடேசனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் (31.05.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமானது ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம், ஐயாத்துரை நடேசன் ஆகியோரின் படுகொலைகளுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகப் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதன் காரணமாகக் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்பாடுகள் மௌனித்துப் போயிருந்தது.
இந்நிலையில், ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் படுகொலையின் பின்னர் மௌனித்துப் போன கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை மௌனித்துப்போன அதே நாளான இன்றைய தினம் (31.05.2023) அதாவது அவர் படுகொலை செய்யப்பட்ட 19ஆவது ஆண்டு நினைவு நாளில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்
இன்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இரா.துரைரெட்ணத்தினால் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் நிர்வாகத்தினரிடம் பொறுப்புகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்றைய தினத்தில் இருந்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமானது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என்பதுடன், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் நோக்கங்கள் கொள்கைகள், என்பவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இரா.துரைரெட்ணம் பின்வருமாறு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |