பிரியந்த குமாரவின் படுகொலையை நியாயப்படுத்தியவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
பிரியந்த குமாரவின் படுகொலைய நியாயப்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டிய நபருக்கு பாக்கிஸ்தான் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரியந்த குமாரதாக்கப்படும் வீடியோவை தனது யூடியுப்பில் பதிவேற்றிய முகமட் அட்னான் என்ற 27 வயது நபர் கொலையையும் உடல் எரியூட்டப்படுவதையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து மதகுரோதத்தை பரப்பி பொதுமக்களின் உணர்வுகளை தட்டிஎழுப்பிய குற்றச்சாட்டினை பொலிஸார் அந்த நபருக்கு எதிராக பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற விசாரiணியன் பின்னர் அந்த நபருக்கு நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri