இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிப்பு
இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தோழிதெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை விக்கி லீக்ஸ் எனும் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே, தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுளார்.
இந்நிலையில்,அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதித்து லண்டன் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பை இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்த நிலையில்,அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தோழி ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கடந்த அக்டோபர் மாதம் 27ம் திகதி நடந்த நீதிமன்ற விசாரணைக்கு அசாஞ்சே காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.தற்போதும் அவருக்கு அந்த நோய் பாதிப்பு உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
விக்கி லீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
