விக்கி லீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என்று இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக அமெரிக்கா இவருக்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை கொடுத்து வந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்து 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்து வந்ததுடன், அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா கோரி வருகின்றது.
இந்நிலையில்,அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என அசாஞ்சே லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டனில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என கூறிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
