அசோக ரன்வலவின் கலாநிதிப் பட்டம் : அமைச்சர் பிமலின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு கலாநிதி பட்டச் சான்றிதழை வழங்க போதுமான நேரம் கடந்துவிட்டதால், தற்போது அவரிடம் சான்றிதழ் இல்லை என்றே தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்ச அரசியல் தண்டனை
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அசோக ரன்வல தனது கலாநிதிப் பட்டச் சான்றிதழை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதன் விளைவாக, ஒரு கட்சி அவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச அரசியல் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டின் உயரிய பதிவியில் இருந்து அவர் குறுகிய காலத்தில் நீக்கப்பட்டமை அவருக்கு கிடைத்த பாரிய தண்டனையாக நான் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.