ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் -செய்திகளின் தொகுப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்டப்ட நிதியை வங்கி கணக்குகளில் வைப்பிலிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1.2 மில்லியன் விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், 2 ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20,000 ரூபாவையும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன்படி இன்றைய தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,