இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக தொடர் உதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய அபிவிருத்தி வங்கியானது (ADB)இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு பல அம்பியூலன்ஸ்கள் மற்றும் வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ள அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதார, போசாக்கு மற்றும் வைத்தியத்துறை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் இத்துறையை முன்னெடுத்து செல்ல அரசினால் போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை. நோயாளர்களுக்கு உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் இந்த நன்கொடையின் முக்கியத்துவத்தை வைத்தியர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி நீண்டகாலமாக நாட்டின் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து உதவி வருகின்றது.ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக 25 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 38 வாகனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நான் பதவி வகித்த காலத்தில் நான் 350 அம்பியூலன்ஸ்கள் சுகாதார அமைச்சகத்திற்கு கொண்டு வந்தேன்.அந்த அம்பியூலன்ஸ்கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் மற்றும் ஃபோர்டு அம்பியூலன்ஸ்கள் ஆகும்.
தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ள ஆம்புலன்ஸ்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அம்பியூலன்ஸ்கள் ஆகும். அவை அம்பியூலன்ஸ்கள் அல்லஇ வேன்கள் ஆகும் பல்வேறு உபகரணங்கள் இணைக்கப்பட்டு அம்பியூலன்ஸ்களாக மாற்றப்பட்டவையாகும். ஆனால் என்னுடைய பதவழ காலத்தில் நான் கொண்டுவந்தவை அம்பியூலன்ஸ்களுக்காகவே தயாரிக்கப்பட்ட அசல் அம்பியூலன்ஸ் பிரத்தியேக வாகனங்கள் ஆகும்.'
இது குறித்து இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,
நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான பணத்தை செலவிடவில்லை. அரசாங்கம் செலவிடும் தொகையானது 'சுகாதாரதுறையின் தரத்தை கொண்டுநடத்தவோ அல்லது அதன் தரத்தை உயர்த்தவோ போதுமானதாக இல்லை' என்று இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.
'ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ADB) நமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம்கள் நமது நாட்டின் சுகாதார துறைக்கு கிடைக்கபெறும் நன்கொடைகளில் மிகப்பெரிய நன்கொடையாகும்.
எமது நாட்டின் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படும் நிறுவனமே ஆசிய அபிவிருத்தி வங்கியாகும். சுகாதார சேவைகளுக்காக எமது நாட்டு அரசின் வரிப்பணத்தினால் ஒதுக்கப்படும் தொகையானது இந்த சுகாதார சேவையின் தரத்தை பேணுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் அறிவோம்.
ஆசிய அபிவிருத்தி வங்கினால் சர்வதேசரீதியாக கவனம் செலுத்தும் முக்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் எமது நாட்டின் சுகாதார துறையின் வளர்ச்சிக்குஇ மேம்பாட்டிற்காக சில திட்டங்களை கொள்கைகளை முன்னெடுக்கும் அவை சிறந்த ஒன்றாகும்.
இந்த அரசாங்கத்தினால் கடந்த இரண்டரை வருடங்களாக சுகாதார துறையின்
வளர்ச்சிக்காக எந்த ஒரு செயற்த்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனவேஇ எந்த
ஒரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காமல் இருக்கும் அரசாங்கத்திற்கு அசிய
அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள குறித்த நன்கொடை உண்மையிலேயே ஒரு
சிறந்த சேவை என்று நான் நினைக்கிறேன்.
சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் சுகாதாரத் துறையில் கொள்கை வகுப்பில் முன்னேறி வருகின்றது.
இந்த நிறுவனம் போன்றே மற்றும் பல நிறுவனங்களும் எங்களுக்கு உதவுகின்றன.குறிப்பாக நமது நாட்டில் ஆரம்ப சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு ஆசிய வளர்ச்சி மேம்பாட்டு நிதியத்தின் பங்களிப்பு மகத்தானது.
எமது சுகாதார அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியை நாம் நினைத்துக்கூடப் பார்க்காத அளவிற்கு அடிப்படை ஆரம்ப சுகாதாரத் துறையை அதிகரிப்பதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஏனெனில் எமது நாட்டில் தற்போது தொற்றாத நோய்களில் அதிக கவனம் செலுத்தாது தொற்றும் நோய்களில் கவனம் செலுத்தப்படுகின்ற ஒரு நிலையினையே பார்க்கின்றோம். இலங்கையில் தொற்றா நோய்கள் காரணமாகவே சரசரியாக நூற்றுக்கு 82 வீதம் தொடக்கம் 83 வீதமான மரணங்கள் பதிவாகின்றன.
எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம்தான்
தொற்றாத நோய்களைத் தடுக்கவும்இ கட்டுப்படுத்தவும் முடியும். நம் நாட்டில் உள்ள
முக்கிய வைத்தியசாலைகளில் மக்கள் படும் அசெகரியம் போன்று பிரதான
வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு அப்பாற்பட்ட நோய்களையும் தடுக்க
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. என்றும் தெரிவித்துள்ளார்.