ஆசிய நாட்டு மத்திய வங்கிகள் பணவியல் கொள்கைகளை தளர்த்தும் வாய்ப்புள்ளதாக தகவல்
ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவியல் கொள்கைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின், ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்திய பொருளாதார கண்ணோட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சீனாவின் தெளிவான பதில்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமது சொத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நிலையான மற்றும் தெளிவான பதிலை சீனா வழங்க வேண்டும்.
ஆசியாவின் சராசரி பணவீக்கம் 2022ஆம் ஆண்டில் 3.8 சதவீதத்திலிருந்து 2023ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாக குறைவடைந்துள்ளது. குறிப்பாக, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களில் விரைவான முன்னேற்றமும் பதிவாகி வருகிறது.
பல ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் 2024ஆம் ஆண்டில் தங்களது பணவீக்க இலக்குகளை அடையும் போக்கில் உள்ளன. இதன்காரணமாக, பணமதிப்பு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்படலாம்.
ஒப்பீட்டளவில் ஆசிய மத்திய வங்கிகள் ஏனைய பிராந்தியங்களில் உள்ள வட்டி விகிதங்களை விட குறைவான அளவிலேயே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
பணவியல் நிலைப்பாடுகள்
இதன்படி, அமெரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள மாறுபட்ட பணவியல் நிலைப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் கூர்மையான மாற்று விகித இயக்கங்களை தூண்டும் அபாயம் காணப்படுகிறது.
இதேவேளை, ஆசிய நாடுகள் 2023ஆம் ஆண்டில் செயற்பட்டதை போன்றே 2024ஆம் ஆண்டும் மீண்டும் உலக வளர்ச்சிக்கு மூன்றில் இரண்டு பங்கை வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
எனினும், சீனாவின் பொருளாதாரத்தில் காணப்படும் மந்தநிலை காரணமாக 2025ஆம் ஆண்டில் பிராந்தியத்தின் வளர்ச்சி 4.3 சதவீதமாக வீழ்ச்சியடையும்.
இதன் காரணமாக சீனா தமது சொத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நிலையானதும் தெளிவானதுமான தகவலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
