ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் இன்று (09..04.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று(8) காணப்பட்ட பாரிய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று சந்தையில் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜப்பானின் நிக்கி சுட்டெண் 0.7% வீழ்ச்சியடைந்ததுடன், தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) சுட்டெண் 1.6% சரிவைச் சந்தித்தது.
வீழ்ச்சி
பிரித்தானியாவின் FTSE 100 சுட்டெண் வர்த்தக ஆரம்பத்தில் 0.1% வீழ்ச்சியடைந்தது. மேலும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் சந்தைகளிலும் இதேபோன்ற சரிவு நிலை காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளதுடன், நிஃப்டி சுட்டெண்ணும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பான நிச்சயமற்ற தன்மையே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.