இன்று மாத்திரமே கால அவகாசம்! அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறத் தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் வெளியிடப்படும் இரண்டாவது பெயர்ப்பட்டியல்
அஸ்வெசும திட்டத்தின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்ட பின்னர், தகுதியுடைய பயனாளர்களின் இரண்டாவது பெயர்ப்பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிதீவிர வறுமை மற்றும் வறுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நிவாரணம் பெறுவதற்கு 991,800 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்காக நாளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.