பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்: ஆசு மாரசிங்க வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, தனது வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் என தெரிவித்துள்ளார்.
ஆசு மாரசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தனது காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் இன்று (24.12.2022) பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வழக்கறிஞரின் கருத்து
இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில்,ஆசு மாரசிங்க நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதாகவும், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், அதற்காக அவரிடம் அதிக பணம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



