மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஷ்ரப் தாஹிர் எம்.பி

Ampara Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Election
By Farook Sihan Dec 18, 2024 06:48 PM GMT
Report

மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள் கிடைக்குமாயின் அது இந்தப் பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraf Tahir) தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து இன்று(18) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்

இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்

மாகாண சபை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை செய்வதற்கும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும் இந்தியா இலங்கை(Sri lanka) ஒப்பந்தத்தின் மூலமாக வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஷ்ரப் தாஹிர் எம்.பி | Ashraf Tahir On Provincial Council Powers

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழ் சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமையினால் தான் இம்மாகாணத்தில் எமது சமூகம் முழுமையான நன்மையை பெற்று கொள்ள முடியாது உள்ளது.

எனவே தான் இந்த மாகாண முறை என்பது ஒழிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு தற்போது உள்ள அரசாங்கத்தில் உள்ளவர்கள் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் இவ்விடயம் குறித்து பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால் வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துக்களாகும். கடந்த காலங்களில் நாங்கள் பல தடைகளை சந்தித்து இருக்கின்றோம். 

நாடாளுமன்றில் ஏற்பட்ட சர்ச்சை நிலை! அர்ச்சுனாவின் செயலை சபையில் பகிரங்கப்படுத்திய அநுர தரப்பு

நாடாளுமன்றில் ஏற்பட்ட சர்ச்சை நிலை! அர்ச்சுனாவின் செயலை சபையில் பகிரங்கப்படுத்திய அநுர தரப்பு

அபிவிருத்திகளுக்கு நிதி

அதில் அதிகார ரீதியாகவும் அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது ரீதியாகவும் இங்கு முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. 

மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஷ்ரப் தாஹிர் எம்.பி | Ashraf Tahir On Provincial Council Powers

அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாக பயணித்து ஒரு சமூகத்திற்கு பணிகளை செய்கின்ற முறைமையை நாங்கள் காண்கின்றோம்.

குறிப்பாக வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணி பொலிஸ் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின் கைகளுக்கு சென்றால் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் இரண்டையும் தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு மிக நீண்ட காலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகின்றது.

எனவே, மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரயோசனம் அடைவார்கள்.

அரசியல்வாதிகளும் மக்களுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 

அரசியல்வாதிகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற ஒரு இடைத்தரகர்கள் போன்று அங்கு இருக்கின்ற வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஷ்ரப் தாஹிர் எம்.பி | Ashraf Tahir On Provincial Council Powers

எனவே, தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள் செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.

ஆகவே, உள்ளூராட்சி மன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில் இருக்கின்றது என்பதை அவர்களது செயற்பாட்டில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது” என்றார்.

சாதாரண தர பரீட்சை திகதி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை திகதி தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US