விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் வாகனம்.. குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்!
சப்புகஸ்கந்த பகுதியில் இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ள நிலையில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து, அந்தப் பெண் கிரிபத்கொட மருத்துவமனையிலும், சிறு குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri