தமிழீழ விடுதலைப் புலிகளின் மணிராசக் குளம் முகாம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும் போர் உத்தியாக கருதப்பட்ட 2002-2004 ஆண்டுகளில் திருகோணமலைக்கு மேற்கே அமைக்கப்பட்ட மணிராசக் குளம் முகாம் தொடர்பான இரகசிய அறிக்கையை தானே தயாரித்ததாக அசங்க அபேகுணசேக்கர தெரிவித்துள்ளார்.
அசங்க அபேகுணசேக்கர கோட்டாபயவின் நெருக்கிய தொடர்பை வைத்திருந்தவர்.கோட்டாபயவின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராவும் செயற்பட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறிய கருத்துக்கள்,
முகாம் எதற்காக அமைக்கப்பட்டது
அந்த காலத்தில் கம்மன்பில திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி குறித்த முகாமை அகற்றுமாறு பிரச்சினைப்படுத்தியதும் இந்த இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் பயங்கர தன்மையை அறிந்திருந்ததால் ஆகும்.
குறித்த காலப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டிருந்தனர்.
மணிராசக்குளம் முகாமை பிரதானமாக கொண்டு திருகோணமலையை சூழ 17 சிறிய முகாம்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்திருந்தனர்.

இந்த முகாம்களை கேந்திரமாக கொண்டு திருகோணமலை துறைமுகத்தை தாக்கி அதைக் கைப்பற்றி அங்கிருந்து தென் பகுதிக்கு தாக்குதலை தொடுத்து நாட்டை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாகும்.
இது தொடர்பில் நன்கு ஆராய்ந்த நான் இரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்த நிலையில் அதை கம்மன்பிலவிடம் கையளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அன்றே எனக்கு அவருடனான நெருக்கம் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையை மூலாதாரமாக கொண்டே முகாமை அகற்றுமாறு கம்மன்பில திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார்.