அருண் சித்தார்த்தனுக்கு மரண அச்சுறுத்தல்..!
புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கந்தசாமி இன்பராசா என்பவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் நீ கொல்லப்படுவாய் எனத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெவித்துள்ளார்.
கந்தசாமி இன்பராசா என்னும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்குமாறு அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்குக் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை அரசு
நேற்றையதினம்( 17) அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்..
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் நம்பும் அரசியலைச் செய்ய இருக்கும் அடிப்படை உரிமையை இன்பராசா மிக மோசமாக மீறியுள்ளார்.
புலிகளை எதிர்த்து அரசியல் செய்தால் கொல்லப்படுவாய். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொழும்பில் இருந்தாலும் ஐரோப்பாவில் இருந்தாலும் நீ கொல்லப்படுவாய். யாழ்ப்பாணத்தில் நீ இருக்க கூடாது. அரசியல் செய்யபயக்கூடாது.
தென்னிலங்கையில் போய் அரசியல் செய். நீ இனிமேல் பேசக் கூடாது. நிறுத்திக் கொள் அருண் சித்தார்த், இது தான் கடைசி எச்சரிக்கை. போன்ற சொற்பிரயோகங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.
இன்பராசா தனது கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி எனச் சொல்கிறார் ஆனால் இலங்கையில் முன்முதலாக 1978 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பு 2009 ஆம் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விசாரணை
அந்த பயங்கரவாத அமைப்பின் பெயரில் எவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சி என்னும் பெயரில் தேர்தல் திணைக்களம் ஒரு கட்சியைப் பதிவு செய்து கொடுத்ததாகக் கேள்வி எழுப்பினார்.
அது குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். மேலும் அரசு புலிகள் முழுமையாக இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளபோதும் இன்னும் புலிகள் இருக்கின்றார்கள் , தலைவர் இருக்கின்றார் என இவர் தெரிவிக்கின்றார்.

அவ்வாறாயின் பயங்கரவாத தடுப்பு பிரவினர் இவரைக் கைது செய்து புலிகளும் பிரபாகரனும் எங்கே இருக்கின்றார்கள் என்பது தொடர்பான தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.
NPP அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டாட அனுமதியளித்துள்ளமையே இன்பராசா போன்றவர்கள் இது போன்ற தமது பழைய பயங்கரவாத செயல்பாடுகளை மீள ஆரம்பிக்க காரணம் என்றார்.
தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பை கொண்டாட அனுமதியளித்துள்ளதன் மூலம் இந்த அரசாங்கம் அரிசலமைப்பை மீறியுள்ளாதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ஒன்று புலிகள் மீதான தடையை நீக்கி விட்டு அவர்களைக் கொண்டாட அனுமதியுங்கள. அல்லது தடை இருக்கின்றது ஆகவே புலி உறுப்பினர்களுக்கான நினைவேந்தல்கள தடை செய்யுங்கள் என்றார்.