நாட்டை சூறையாடியவர்கள் சட்டத்திடம் தப்பிக்க முடியாது: அருன் ஹேமச்சந்திர தெரிவிப்பு
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு எவரும் தப்பிக்க முடியாத வகையிலே கைதுகள் இடம்பெறுவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருன் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில், "தற்போது நாட்டில் அடிக்கடி கைதுகள் இடம்பெறுவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் தெ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "கைது செய்தாலும், ஏன் கைது செய்கிறீர்கள் எனவும் கைது செய்யாவிட்டாலும் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும் ஊடகவியலாளர்களே கேட்கின்றனர்.
கடந்த அரசாங்கங்கள்
அரசியல் ரீதியாக எவரும் பழி வாங்கப்படவில்லை. ஊழலோடு சம்பந்தப்பட்ட, அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பாகவே முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
2015 நல்லாட்சி காலத்தில், அவசரமாக போடப்பட்ட வழக்குகள் காரணமாக சிலர் தப்பித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டது. எமது ஆட்சியில், அவ்வாறில்லாமல், குற்றவாளிகளுக்கு சரியான விசாரணைகளும், உரிய தண்டனைகளும் வழங்கப்படும்.
இதில் பாகுபாடுகள் எதுவும் காட்டப்படமாட்டாது. இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரத்தியேக மெய் பாதுகாவலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு, கருப்பு பணம் தொடர்பாக இவர் விசாரணைக் உட்படுத்தப்பட்டார். பண்டிகை காலங்களில், அனைத்து அமைச்சர்களும் நாட்டில் இருந்து பணியாற்றுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இப்போது தான் ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து நாட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிப்பதை ஊடகங்கள் வாயிலாக கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.
அரசாங்கம் தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுக்கு நிரந்தர தீர்வு எட்டிய பின்னரே, இந்த நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர முடியும்” அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |