தீபத்திருநாள் பற்றி பேசிய அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் திருநாளின் நோக்கம் இக்காலத்தில் எமது நாட்டுக்கும் பொருத்தமானதோடு தேவையான ஒன்றாகும் என வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கான ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி பண்டிகை நிகழ்வு இன்று பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் மண்டபத்தில் பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
இருள் சூழ்ந்த யுகம்
எமது நாட்டிலும் இருள் சூழ்ந்த ஒரு யுகம் காணப்பட்டது. அந்த இருளை நீக்கி ஒளி பாய்ச்ச வேண்டும். திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றால் நாடு இருளில் சூழப்பட்ட காலம் இருந்தது. நாம் கடந்த காலத்தில் இவற்றை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதை நாம் தொடர்ந்தும் கொண்டு செல்வோம். கடந்த நாட்களில் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
