நாளொன்றுக்கு 15 000 ஏவுகணைகள்!! 2025ம் ஆண்டளவில் உக்ரைன் களமுனையில் ஏற்படப்போகும் மாற்றம்
கடந்த ஆறேழு மாதங்களாக உக்ரைன் களமுனைகளில் ஓரளவு முன்னேற்றத்தை வெளிக்காண்பித்துவந்திருந்ன ரஷ்யப்படைகள்.
உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்க்கிவினுள் நுழைந்து அங்கிருந்த சில பிரதேசங்களைக் கைப்பற்றும் அளவுக்கு ரஷ்யப்படைகளின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அங்கு இருந்துவந்தது.
ரஷ்யப்படைகளின் இந்த முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியமாக காரணி - அவர்கள் உபயோகித்த ஆட்லறித் தாக்குதல்கள்தான்.
நாளொன்றுக்கு சராசரியாக 10,000 ஆட்லறி ஷெல்களை ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது ஏவி வந்ததாகக் கூறப்படுகின்றது.
அதாவது உக்ரைன் மீது ஆட்லறிக் குண்டுகளை மழையாகப் பொழிந்துதான் ரஷ்யாவின் அந்த முன்னேற்றங்கள் இருந்துவந்தன.
உக்ரைன் மீது ஆட்லறி குண்டுகளைப் மழைபோல் தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்தால் , 2025ம் ஆண்டளவில் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடம் சரணடையும் என்பது ரஷ்யப் போரியல் ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.
இந்த விடயம் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |