செயற்கையாக நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள்-சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு
செயற்கையாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கேள்விகளை தயாரிக்கும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம்

கேள்விகளை தயாரிப்பது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகத்தில் இருக்கும் சம்பளத்தை பெற்று கேள்விகளை எழுதும் நபர் எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விடயம் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு எழுதப்படும் கேள்விகள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுகின்றன.இதனால், வேறு நாட்களின் கேள்விகள் கேட்க இடமளிக்க வேண்டாம் எனவும் அது சூழ்ச்சிகரமாக செய்யும் விடயம் எனவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணது்ஙக பதிலளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் அமளியான நிலைமை ஏற்பட்டது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam