AI தொழிநுட்பம் தொடர்பில் பயனர்களை எச்சரித்த சுந்தர் பிச்சை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், அது தவறு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே சுந்தர் பிச்சை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயனர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை சந்தேகத்துடன் அணுக வேண்டும். கூகுளின் ஜெமினி போன்ற அதிநவீன மென்பொருள் கூட தவறுகளைச் செய்யக்கூடும்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, நாங்கள் மேற்கொள்ளும் பணி பற்றி பெருமைப்படுகிறோம்.
ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் சில பிழைகளுக்கு ஆளாகிறது. மக்கள் இதனை சிறந்தவர்களாக இருப்பதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ஏஐ சொல்லும் அனைத்தையும் நம்பக்கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும். இதனை கவனமுடன் கையாள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri