ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்.. ட்ரம்ப் மிரட்டலால் அச்சத்தில் உலக நாடுகள்

Donald Trump Vladimir Putin United States of America Russia Trump tariff
By Shadhu Shanker Nov 18, 2025 09:30 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! முக்கிய குற்றவாளி வெளியிட்ட காணொளி..

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! முக்கிய குற்றவாளி வெளியிட்ட காணொளி..

ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என விதித்து வருகின்றார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்.. ட்ரம்ப் மிரட்டலால் அச்சத்தில் உலக நாடுகள் | Donald Trump Warns Sanctions On Russia Trade

2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன.

குறிப்பாக, ரஷ்யாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார். ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..

ரஷ்யாவுடன் வர்த்தகம்

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்,

"குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி.

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால்.. ட்ரம்ப் மிரட்டலால் அச்சத்தில் உலக நாடுகள் | Donald Trump Warns Sanctions On Russia Trade

குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், "ஜனாபதி ட்ரம்பும் அவருடைய குழுவும் ரஷ்யாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும்.

புடினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

சாரா ஜெஸ்மின் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வி..!

சாரா ஜெஸ்மின் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வி..!

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US