காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பூச்சி புழுக்களோ, புல் பூண்டுகளோ அல்லர் - அவர்கள் இந்நாட்டுக் குடிமக்கள்

Protest Eastern Province Northern Province Article
By Independent Writer Sep 23, 2021 11:04 AM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report

இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பூச்சி புழுக்களுமல்ல, புல் பூண்டுகளுமல்ல. இந்த நாட்டின் பிரசைகள், மனித உயிர்கள்.

இவர்களது உறவுகள் மூன்று வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என கட்டுரையாளரான இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும், 

போராடிய உறவுகளான சாட்சியங்கள் 60 இற்கு மேற்பட்டவர்கள் நீதி கிடைக்காமல் மரணமடைந்துமுள்ளனர். அவர்களின் கண்ணீர், சிந்திய செந்நீரோடு அரசு விளையாடக்கூடாது.

ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும் என்பார்கள். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அரசியல் விடயத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகளாகவே வாழ்கின்றனர்.

அக்காலத்தில் தற்போதையப் பிரதமர் மகிந்த ஜனாதிபதியாக இருந்தார். தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். அக்காலத்தில் தான் அதிகமான கடத்தல்கள் காணாமலாக்குதல்கள் நடைபெற்றன.

அதற்கு முன்பும் நடைபெறாமல் இல்லை. ஆனால், கண்களுக்கு முன்பாகச் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் ரவ்வீந்திரநாத் தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார். தமிழர் புனர்வாழ்வுக்கழகத் தொண்டர்களான ஆண்கள், பெண்கள் 13 பேர் வெலிக்கந்தையில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார்கள்.

இதே போன்று பல நூற்றுக்கணக்கான கடத்தல்கள் பல்லாயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்படுதல்கள் நடைபெற்றுள்ளன.

இவர்களது பெறுமதிகளை வெறும் மரணச் சான்றிதழ்கள், சில இலட்சம் ரூபாய்களால் கணக்கிட்டு முடித்து வைக்க முடியாது. காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப்பாருங்கள் என்றார் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa).

காணாமல் போனவர்களை மறந்து விடுங்கள் என்றார் குடியாட்சி நாட்டின் முதற் குடிமகன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அவர்கள். தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணியுந்தான் என்றார் அமைச்சர் மகிந்தானந்த (Mahindananda Aluthgamage).

இந்த உயர் மட்டத்தாரின் பரிகசிப்புகள் நையாண்டிகளைப் பார்த்தால் தமிழர்களின் பிரச்சினைகள் இழப்புகள் பற்றிப் பேரின அடிப்படைவாத அதிகாரவர்க்கம் என்ன நினைக்கின்றது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழர்களின் உயிர்கள் வெறும்பூச்சி புழுக்கள், புல் பூண்டுகளின் உயிர்களுக்கு ஒப்பானதாக ஆட்சியாளர்களால் கருதப்படுகின்றது.

அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்றஸ் (António Guterres) அவர்களைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இரண்டு விடயங்களைக் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல், நஷ்ட ஈடுகள் வழங்குதல் என்பவையே அவையாகும்.

இதில் இருந்து ஒரு உண்மையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். அதுவும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரிடமே சொல்லிவிட்டார். அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்களென்று.

இந்த இடத்தில் மந்திரி சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) அவர்கள் கருத்தொன்றினைக் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில், என்ன காரணத்திற்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள்? அவ்விடயத்தில் குற்றம் நடந்துள்ளதா? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்கள்? அவர்கள் எந்தப்பக்கம்? என்பதையெல்லாம் பார்க்க வேண்டாம்.

அவர்கள் இலங்கை நாட்டின் குடிமக்கள் என்பதை மாத்திரம் உணர்ந்து இழப்பீடுகளை வழங்க வேண்டும். இவைதான் அந்தக் கருத்துகள்.

அப்படியென்றால் ஏன் கடத்தப்பட்டார்கள்? எதற்காகக் கொல்லப்பட்டார்கள்? கடத்தியவர்கள் யார்? குற்றவாளிகள் யார்? அவர்கள் எங்கு கொண்டு சென்றார்கள்? யாரின் கட்டளைப்படி கடத்தினார்கள்? கொன்றார்கள்? என்பது பற்றியெல்லாம் ஆரயக்கூடாது என்பதுதான் இப்போதைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடாகும்.

அப்படியென்றால் எல்லாம் நடந்துவிட்டது? அதுவும் இந்த நாட்டுப் பிரசைகளை வெளிநாட்டவர்கள் கடத்தவில்லை, கொல்லவில்லை நம் நாட்டவர்களே கொன்றுள்ளார்கள் என்பது வெளிப்படை.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்தவர்கள் யாவர் என்று அறிவதற்கான உரிமை கூட உறவினர்களுக்கு இல்லையா? குற்றவாளிகளை ஏன் சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியாது? ஏன் அவர்களை விசாரிக்க முடியாது? ஏன் அவர்களைத்தண்டிக்க முடியாது? ஒப்படைக்கப்பட்டவர்கள், சரண் அடைந்தவர்கள் கூடக் கொல்லப்பட்டு விட்டார்கள்.

இதற்கான கட்டளையைப் பிறப்பித்த அந்த அதிகாரிகள் யார்? எப்படிக் கொன்றார்கள்? எங்கே புதைத்தார்கள்? என்கின்ற உண்மைகளை அறிவதற்கான உரிமைகள் நியாயங்கள் கூட இந்த சட்டவாட்சியுள்ளதாகக் கூறப்படும் குடியாட்சி நாட்டில் இல்லையா? இதுதான் பெளத்த தருமம்? யாருக்கு நீங்கள் தர்ம போதனை நடத்துகிறீர்கள்? ஊருக்கு உபதேசம் உனக்கல்லடா மகனே! என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இவற்றுக்கு எல்லாம் மத்தியில் பாரிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் நடைபெறும் போது, தமிழர் என்று சொல்லித் தமிழ் பேசுகின்ற சிலர் ஆமாம்சாமிகளாகவும், தலையாட்டிப் பொம்மைகளாகவும் இருப்பது தான் மிகவும் வேதனையான விடயமாகவுள்ளது.

இன்னும் நான்காண்டுகளில் எவ்வாறு பதவி சுகத்தை அனுபவிக்கலாம்? பணம் எவ்வளவு திரட்டலாம்? களியாட்டம் எப்படி நடாத்தலாம்? மண்வளத்தை எப்படிச் சூறையாடிப் பணமாக்கலாம்? ஒப்பந்தக்காரரிடம் எத்தனை வீதம் சுருட்டலாம்?

மாடிகள் எத்தனை கட்டலாம்? கோடிகள் எப்படிச் சுருட்டலாம்? என்று அன்றாடம் சுழல்கின்ற அடிவருடர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

உளுத்துப்போன உள்நாட்டுப் பொறிமுறை மூலம் உள்நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறார்களாம்? இதற்கும் திரைமறைவில் யாரும் தலையாட்டுகிறார்களா? என்பது தான் எமது கேள்வியாகும்.

ஆட்சியாளர்களின் உளுத்துப் போன வெளுத்துப்போன எந்தப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்குத் தீர்வுகளைத் தராது. அரசாங்கத்தில் மாற்றம் தெரிகிறது.

தீர்வு தரப்போகின்றார்கள் என்று யாராவது தமிழர் சொன்னால் மக்களை மடையர்களாக்கி ஒப்பந்த அடிப்படையில், செயற்படும் அரசியல் தரகர்களின் செயற்பாடுகள் என்று அடையாளம் கண்டு கொள்ளோம்.

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைத்துவிட்டு வியாக்கியானம் அளிக்கின்ற எவரையும் தமிழ் மக்கள் நம்ப வேண்டியதில்லை. எமது இழப்புகளின் வலிகளை உணராத சலுகைவாசிகள் ஒரு போதும் எமக்காகக் குரல் கொடுக்க மாட்டார்கள்.

நமது வலியை, நமது சுமையை நாம்தான் சுமந்து கொண்டு ஒற்றுமையாக நீதியை நியாயத்தைத் தேட வேண்டும். பூகோள அரசியல்சார் செல்நெறியையும் புரிந்து கொண்டு, இராஜதந்திர ரீதியான நகர்வுகளையும் செய்ய வேண்டும்.

விடாக்கண்டர் கொடாக்கண்டர்களாகவுள்ள நாட்டின் அதிகார வர்க்கத்தினர் தனிப்பட்டவர்கள் குழுக்களுக்குச் சலுகைகள் அளிக்கலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய ஆளுமையோ அர்ப்பணிப்போ அவர்களிடம் இல்லை.

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்பார்கள் கடந்து விட்டால் நீ யாரோ நான் யாரோ என்பார்கள். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம் போன்ற தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகத் தமது அறிவாற்றல் சேவைகளை அள்ளி வழங்கினார்கள். சுதந்திரத்தின் போது அவர்கள் சிங்களத் தலைவர்களை நம்பி ஒற்றையாட்சி முறைக்குச் சம்மதித்தார்கள்.

அவர்கள் நினைத்திருந்தால் வடக்கு - கிழக்கிற்கு மாநில சுயாட்சியைக் கூடப் பெற்றிருக்கலாம். அவர்களது கொழும்பு இருப்பியல் அரசியல் வடக்கு - கிழக்கு பற்றிச் சிந்திப்பதற்குத் தடையாக இருந்திருக்கலாம்.

வடக்கு - கிழக்கு மக்களின் வலிகளை உணர்வதற்கு யுத்த காலத்தில் வடக்கு - கிழக்கில் வாழ்ந்தவர்களால் தான் முடியும். அதற்கப்பால் வாழ்ந்தவர்களால் அதை உணர முடியாமலும் போகலாம், மேட்டுக்குடி நட்புகளுக்காக கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை எந்த ஒரு தமிழனும் தனிப்பட்ட முறையில் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது.

அப்படி நடந்தால் அதனை இனங்க்கண்டு தவிர்க்கவேண்டும். குருவிச்சைகள் மரங்களில் முளைக்கலாம். பச்சிலைகளோடு பச்சிலையாகவுள்ள குருவிச்சைகள் அகற்றப்படா விட்டால் பயனுள்ள தாய் மரத்திற்கும் அது தீமையாய் அமைந்து விடும்.

இறுதியாக்க் காணாமல் ஆக்கப்படவர்கள் பிரச்சினை கச்சான், கடலை, கறிவேப்பிலை வியாபாரம் போன்றதல்ல என்பதை சிங்களத் தலைவர்கள்,சில தமிழ்த் தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனை ஒப்பந்த வேலையாக எவரும் நினைக்கக் கூடாது. தமிழ்த் தரப்பைப் பலவீனப்படுத்துகின்ற எந்த வேலையிலும் தமிழர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

இதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற வார்த்தைகளில் நாம் அவதானமாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US