காட்டு ஆட்சியாளர்களை போல செயற்படும் அரசாங்கம் - அனுரகுமார
ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோர், காவல்துறையினரால் கைது செய்யப்படுவது குறித்து தேசிய மக்கள் சக்தியின், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், அதில் ஈடுபட்டோர், வீடுகளில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர், பேருந்துகளில் ஏறி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.அதேநேரம் பல பல்கலைக்கழக மாணவர்களை வெள்ளை வேன்களில் வந்த சீருடை அணியாத காவல்துறையினர் கடத்திச் சென்றனர்.
அரசாங்கம், ஒரு ஆட்சியைப் போன்று செயல்படவில்லை, காட்டு ஆட்சியாளர்களைப் போலச் செயல்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். கைது செய்யப்பட்டால், அது சரியான வழியில் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர, காவல்துறையின் செயல்பாட்டில் தாம் செல்வாக்கைப் பிரயோகிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க, அதிகாரப்பூர்வமாக, கேள்வி எழுப்பியிருந்தால், அந்த கேள்விக்கு, தாம் பதிலளிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.