பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் திடீரென மரணம்! பாணந்துறையில் சம்பவம்
பாணந்துறை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் சற்றுமுன் திடீரென்று உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து நேற்றிரவு பொலிஸார் அவரது வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
உறவினர்களிடம் பொலிஸார் விசாரணை
இதன்போது கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயத்துடன் சந்தேகநபரான பெண்ணையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வரும் வழியில் அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து குறித்த பெண்ணின் உறவினர்களை அழைத்து பொலிஸார் அவர்களிடம் சந்தேகநபரான பெண்ணை ஒப்படைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
