செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தகொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது.
கெஹல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
சிசிடிவி கமராக்கள் ஆய்வு
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படும் சமிந்து தில்ஷான், தப்பிச்செல்லும் போது புத்தளம் பாலவியாவில் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருப்பது தெரியவந்தது.
சட்ட புத்தகத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட பெண் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டார்.
குற்றத்தைச்செய்த பிறகு, இஷாரா செவ்வந்தி மித்தெனியா பகுதியிலிருந்து ஜே.கே. பாய் எனும் நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வந்திக்கு மாற்றாக மற்றொரு பெண்
இதற்காக சுமார் 6.5 மில்லியன் ரூபாய் செலவழித்து இந்தியாவுக்குத் தப்பிச்சென்று சுமார் மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
இதன் பின்னர் பேருந்து மற்றும் ரயில் மூலம் தப்பிச்சென்று தலைமறைவாகி 7 நாட்களுக்குப் பிறகு அவர் நேபாளத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேபாளத்தின் மலைப்பகுதியில் உள்ள மாடி வீடொன்றின் மேல் தளத்தில் தங்கியிருந்த போது நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், செவ்வந்திக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச்செல்ல இஷாரா கடவுச்சீட்டையும் தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



